A few words

Nizhal Pathiyam

➥ குறும்படம் மற்றும் ஆவணப்பட வரலாற்று நூலான எனது ,''சொல்லப்படாத சினிமா ''புத்தகம் வந்த பிறகு, அதை கோவை பி.எஸ்.ஜி கல்லூரியின் தொடர்பு ஊடக துறையில் திரு.பிச்சாண்டி அவர்கள் வெளியிட்டார். அதைப்பார்த்த திருப்பூர் பதியம் வாசன் ,''இது செயலுக்கான புத்தகம் ''என்றார். அவரது முன் முயற்சியில் அவிநாசி அடுத்த கிராமத்தில் ஒருநாள் பயிற்சியை தொடங்கினோம். அதில் நேரம் போதாமையை எங்களுக்கு விளக்கி காட்டியது. அடுத்த பட்டறை கோவையை அடுத்த கணுவாயில் மூன்று நாளானது.இதை யடுத்து காரைக்காலிலும் இவ்வாறே நடத்தப்பட்டது. உடுமலையில் ஐந்து நாள் ஆனது. அதைத் தொடர்ந்து பாலக்கோடு, திருச்சி, இராமநாதபுரம் முதலிய ஊர்களிலும் தொடர்ந்தது.

➥ சென்னையில்தான் முதன்முதலில் ஏழு நாள் நடத்தப்பட்டது. பின்னர் அது பலரின் வேண்டுகோளுக்கு இணங்க ஆறு நாள் ஆனது. மூன்று ஆண்டு படிக்க வேண்டிய ஊடகக் கல்வியை ஆறு நாளில் கொடுப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. நடிப்பு, திரைக்கதை, கேமரா, ஒப்பனை, படத்தொகுப்பு, மற்றும் திரைப்பட வரலாறு, விமர்சனம், குறும்படம் மற்றும் ஆவணப் படவரலாறும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. தினசரி 12மணிநேரம் கோட்பாடும் பயிற்சிக்காகவும் ஒதுக்கப்படுகிறது. கடைசி ஒருநாள் வந்திருக்கும் பயிற்சியாளர்களிடம் கேமரா கொடுக்கப்பட்டு அவர்களுக்கான குறும்படத்தை எடுக்க வைக்கிறது. உலக அளவில் நிழல் பதியம் பட்டறையில் மட்டுமே எந்தவித அரசு உதவி இன்றி மக்களிடம் பெற்று மக்களுக்கு வழங்குகிறது. இதை பார்த்த ஒரு கிராமத்தவர் சொன்னார்,''இது ஏழு நாள் கல்யாணமல்ல இருக்கு ''.

இரண்டு முழக்கங்கள்

➥ பார்வையாளரை படைப்பாளி ஆக்குவது.

➥ மீன் கொடுப்பதில்லை;மீன் பிடிக்கவே கற்றுக்கொடுக்கிறோம். பார்வையாளர்களை -பார்வையாளராகவே வைத்துக்கொள்வது முதலாளிகளின் வேலை; நமது நோக்கமோ அவர்களை படைப்பாளிகளாக உருவாக்குவது.இன்றைக்கு நமது பட்டறை மாணவர்கள் 2000பேர் , திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணிபுரிந்து வருவதிலிருந்தே நமது நோக்கம் நிறைவேறி வருவதை பார்க்கலாம். பிரெஞ்சு இயக்குனர் கோடார்ட் சொன்னார்:'' எல்லோரும் பேனா வைத்துக்கொள்வது போல கேமராவும் புழக்கத்தில் வரவேண்டும்''என்றார். இது ஜனநாயகப்படுத்துதலைப் பற்றியது தான். ''ஒருவனுக்கு இலவசமாக ஒன்றைக் கொடுப்பதைவிட ஒரு வேலைசெய்யக் கற்றுக்கொண்டால்[சுய தொழில் பயிற்சி ]அவனே அதற்கு முதலாளி ஆகி விடுவான் என்று என் தாத்தா அடிக்கடி சொல்வார் .இதைத்தான் மேலே கண்ட சீனப் பழமொழியும் உறுதி செய்கிறது. இவற்றின் மூலமாகத்தான் சுயமான படைப்பாளிகள் தோன்றுவார்கள்.

மாணவர்கள்

➥ நமது பட்டறை தமிழ்நாட்டை இரண்டு முறை சுற்றி வந்து விட்டது.பெரும்பாலும் கிராமப்புறங்களிலேயே நடத்தப்பட்டது.கிராமப்புற இளைஞர்களுக்கு திரைப்படக்கல்வி போய் சேரவேண்டும் என்பது நடைமுறையில் வெற்றி பெற்றது. இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா , முதலிய தெற்கு ஆசியநாடுகளில் இருந்தும் கலந்து கொண்டனர். ஒருவர் ஆஸ்திரேலியாவில் இருந்தும் மற்றொருவர் பிரான்சில் இருந்தும் பங்கெடுத்தனர். இது தவிர, கேரளா, ஆந்திரா , மகாராஷ்டிரா, ஒரிசா, கர்நாடகா ,போன்ற வெளிமாநில மாணவர்களும் கலந்து கொண்டனர். கோவை ஈ எல் ஜி ஐ ஊழியர்களுக்காகவும், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி , தோட்டக்கலைத்துறை பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்காக இரண்டு வாரம் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. உலகளவில் ஒரு வாரத்தில் சினிமாவின் அடிப்படையை கற்றுக்கொடுத்து வரும் மாணவர்களையே குறும்படம் எடுக்க வைக்கும் ஒரே அமைப்பு . நிழல் பதியம் மட்டுமே.

பட்டறை நடந்த இடங்கள்

அவிநாசி

கோவை

காரைக்கால்

திருப்பூர்

தஞ்சை

பாலக்கோடு

இராமநாதபுரம்

திருச்சி

திருநெல்வேலி

சிவகங்கை

மதுரை


திருவள்ளூர்

சேலம்

கன்னியாகுமரி

சிதம்பரம்

தஞ்சை

கிருஷ்ணகிரி

விருதுநகர்

உசிலம்பட்டி

அருப்புக்கோட்டை

புதுச்சேரி

சென்னை

செஞ்சி


கரூர்

மன்னார்குடி

ஈரோடு

பாளையம்

ஆப்பக்கூடல்

அமைந்தகரை

தேனீ

நெய்வேலி

சிங்காநல்லூர்

அழகாபுரம்

பொன்மலை

குன்றத்தூர்


பிஷேப் ஹீபர் கல்லூரி

கால்நடை மருத்துவக்கல்லூரி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்


திரு.விகா .கல்லூரி

பாரத் கல்லூரி

கூகை

அன்னூர்

ஆரோவில்

வேளச்சேரி

நெடுங்குன்றம்


➥ ஐந்துமுறை போரூர் ஆல்பா கல்லூரியிலும்

➥ ஐந்துமுறை ஆப்பக்கூடல் [ஈரோடு ]சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் குறும்பட பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

➥ 2022 ல் இந்தியா அளவில் முதன் முறையாக வண்டலூரியிலும், தஞ்சை பாரத் கல்லூரியிலும் CELLPHONE FILM MAKEING WORK SHOP நடத்தப்பட்டது.


திரைவானில் நமது பட்டறை மாணவர்கள்

➥ உறுமீன் -சக்திவேல் பெருமாள்சாமி [இயக்குனர்]
➥ என்கிட்டே மோதாதே -ராமுசெல்லப்பா
➥ டோரா -தாஸ் ராமசாமி
➥ ட்ராபிக் ராமசாமி-விக்கி
➥ 4ஜி -வெங்கட் பாக்கர்
➥ பிரகாமியம் -பிரபாகரன்
➥ நசீர் -அருண் கார்த்தி
➥ சபரி-இயக்குனர்
➥ டெலமா -பாண்டியன் சூறாவளி

பட த்தொகுப்பாளர்கள்

➥ அருண் துரைராஜ் -அஞ்சாதே; முரண்
➥ ஜோசப் -மன்மத அம்புகள் ; விஸ்வரூபம்
➥ வள்ளுவன்-நாச்சியார்
➥ சிவா -கூழாங்கல்

உதவி ஒளிப்பதிவாளர்கள்

➥ மோகன்-[மாலைநேரத்து மயக்கம்]
➥ சரத் -நாதன்
➥ அம்பேதகர்-கலைஞர் டி .வி
➥ ராஜ்மோகன்-சன் டி .வி
➥ ஹரி-தொட்டால் தொடரும்
➥ ஜெக தீசபாகிஸ்வரன்

உதவி இயக்குனர்கள்

➥ சரவணன்-புறம்போக்கு
➥ முகிலன்-புகைப்படம்
➥ அர்ஜுனா [பலப்படங்கள்]
➥ பிரகாஷ்வி-நரை
➥ தம்பிச்சோழன்-அம்மாவின் கைபேசி
➥ மதியழகன் சுப்பையா-இந்திப்படங்கள்
➥ க்ரிஷ்ணப்ரியன்-மெட்ராஸ்
➥ ஸ்டாண்லி -தெலுங்குப்படங்கள்
➥ பஷால் -புகைப்படம்
➥ செல்வகுமார், க்ரிஷ், ராம் , மகேந்ததிரன்ராகவ்

நடிகர்கள்

➥ லகுபரன்-ராட்டினம்
➥ விநோத்க்கிஷன் -அந்தகாரம்
➥ ஐசக் பாண்டியன்-மாரி
➥ ராகவ்-படைவீரன்
➥ மாரி , சுப.ராஜ்குமார்[பாரம்]
➥ சிஜி
➥ செந்தில்-பல படங்கள்

பாடல்

➥ ராஜசேகர்-டூரிங் தியேட்டர்
➥ பிரகாவி -நரை

ஆய்வு

➥ தமிழ் குறும்படங்களில் இலக்கிய கூறுகள் -பேரா .ராம்ராஜ் [முனைவர்பட்டம்]
➥ குறும்படங்களின் அழகியல் - பேரா . ராஜசேகர்.

பேராசிரியர்கள்

➥ பேரா . விடுதலை
➥ பேரா . குறிஞ்சிவாணன்
➥ பேரா . ராவுத்தர் மீரான்
➥ பேரா. அருண்சுபாஷ்
➥ பேரா . நாகேஸ்வரி

பட்டறைக்கு வந்து பெருமை சேர்த்த இயக்குனர்கள்

➥ அருண்மொழி /ஜி .எம் .சுந்தர்
➥ ஜனநாதன்
➥ ராம்
➥ பசி துரை
➥ மிஷ்கின்
➥ களஞ்சியம்
➥ கௌதமன்
➥ பூ சசி
➥ அமீர்
➥ ராமகிருஷ்ணன் [குங்குமப்பூவே]
➥ கமலக்கண்ணன் [மதுபானக்கடை ]
➥ ஸ்டாலின் ராஜாங்கம் [காடு ]
➥ சக்திவேல் பெருமாள்சாமி
➥ விக்னேஸ்வரன்
➥ ராமுச்செல்லப்பா
➥ ராச் குமார் [வெங்காயம்]
➥ சற்குணம் [களவாணி]
➥ சீனுராமசாமி

➥ தங்கர்பச்சான்
➥ வினோத் [சதுரங்கவேட்டை]
➥ பாலாஜி சக்திவேல்
➥ ரவி [நேற்று இன்று நாளை]
➥ சொர்ணவேல்
➥ ராம்ஜி [உடும்பன் ]
➥ சசி /கதிர் [சுப்ரமணியபுரம் ]
➥ பாலுமகேந்திரா
➥ கோபிநயினார்
➥ பிருந்தா சாரதி
➥ தமிழ் [டணாக்காரன் ]
➥ கவிதா பாரதி
➥ ரஞ்சித்
➥ அதியன் ஆதிரை
➥ அம்ஷன்குமார்
➥ லெனின் பாரதி
➥ மாரிசெல்வராஜ்
➥ மீரா கதிரவன்
➥ போன்றவர்கள் பல்வேறு கிராமங்களுக்கும் வந்து எங்களுடன் பயணித்தவர்கள்.

பட்டறையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த உள்ளங்கள்

➥ பதியம் வாசன், லிங்காஸ் செழியன் , தம்பிச்சோழன் , சுரேஷ்வரன், செந்தில், ராஜ்குமார், பாலுமணிவண்ணன், ஜீவா, அருண் துரைராஜ், துரை, கலை ,ஞானப் பிரகாசம், பிரசன்னா, ஜெகதீஸ், பன் . இறை, சிஜி செந்தில், ரஹ்மான், ஆனந்த், கலைச்செல்வன், பாரி ,தாஸ் , மோகன்,சிவா.

Nizhal - Pathiyam

Short Film Workshop